வெளிநாட்டு கப்பலில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி 12 லட்சம் மோசடி!!

615

arrest1வெளிநாட்டு கப்பல்களில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பணமோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டில் பெபிலியான பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நபர் மூவரிடம் 12 லட்சம் ரூபா பண மோசடி செய்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மூவருக்கும் பணம் வழங்குவதற்கு அவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.