வீட்டிலிருந்த பெண் ஒருவரை கத்தியினால் வெட்டி தாக்குதல் மேற்கொண்ட இருவரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு 9.00 மணியளவில் இந்த சம்பவம் தங்கொட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 36 வயதான பெண் ஒருவரே மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
தான் வீட்டிலிருந்தவேளை மோட்டார் வண்டியில் வந்த இருவர், தன்னை வெட்டி காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அப் பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
யாரினால் எதற்காக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறித்த தகவல்கள் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுன்னர்.