அமெரிக்காவில் ஊடக பெண் அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு!!

863

abஅமெரிக்காவிலிருந்து வெளியாகும் சிறுவர்களுக்கான பத்திரிகை ஒன்றின் பெண் அதிகாரி மீது, சக ஆண் ஊழியர்கள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர்.

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ஆர்ச்சி காமிக்ஸ் என்ற சிறுவர்களுக்கான பத்திரிகையின் தலைமை செயல் அதிகாரி 59 வயதான நான்சி சில்பர்கேட் கடமையாற்றி வருகிறார்.

பல்வேறு பணிச்சுமைகளுக்கிடையே பணியாற்றும் நான்சி மீது சக ஆண் ஊழியர்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். நிறுவனத்தின் உயர் பதவிகளில் இருக்கும் இவர்கள் நான்சி தங்களிடம் பல வகையில் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் அடிக்கடி கடிந்து கொள்வதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

அடிக்கடி கெட்ட வார்த்தை பேசும் நான்சி சக ஊழியர்களை பெயர் சொல்லி அழைப்பதற்கு பதிலாக ஆபாச வார்த்தைகளைக் கூறி அழைப்பதாகவும் கூறியுள்ளனர். அவரின் மனநிலை பாதித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவது சிரமம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இந்த குற்றச்சாட்டுக்களை நான்சி மறுத்துள்ளார். இதுகுறித்து நான்சி குறிப்பிடுகையில்..

என் மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளனர். முறைப்பாடு கொடுத்தவர்களில் ஒருவர் என்னை பாலியல் உறவிற்கு அழைத்தார். நான் மறுத்து விட்டதால் என் மீது முறையற்ற புகார்களை எழுப்பியுள்ளனர். என் பதவியை பறிப்பதற்காகவே திட்டமிட்டு இந்த சதிச் செயலை செய்துள்ளனர் என நான்சி தெரிவித்துள்ளார்.