சோர்ந்து போயிருக்கும் துளசி : ஆறுதல் கூறும் ராதா!!

609

rathaஅலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக் – ராதாவை பாரதிராஜா அறிமுகம் செய்தார். அதையடுத்து, அவர்களின் வாரிசுகளான கெளதம்-துளசி நாயர் ஆகிய இருவரையும் கடல் படத்தில் அறிமுகம் செய்தார் மணிரத்னம்.

இந்த படத்துக்காக கெளதமை ஒப்பந்தம் பண்ணிய பிறகுதான் இப்படியொரு எண்ணம் மணிரத்துக்கு உருவானதாம். அதையடுத்து, மும்பைக்கு சென்று ராதாவின் மகளான துளசியையும் பார்த்த மணிரத்னம், அவரை உடல் எடையை குறைக்குமாறு சொல்லிவிட்டு அறிவுரையும் கொடுத்து விட்டு திரும்பினார்.

அதனால், மிகுந்த எதிர்பார்ப்புகளோடு கடல் படத்தில் கெளதம்-துளசி இருவரும் களமிறங்கினர். ஆனால், அப்படம் வெற்றி பெறவில்லை. இருப்பினும் அடுத்தடுத்து புதிய படங்களை கைப்பற்றி தப்பித்துக்கொண்டார் கெளதம்.

ஆனால் துளசி அதற்கு முன்பே ஒப்பந்தமான யான் என்ற படத்தில் மட்டுமே நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், சில சின்ன பட்ஜெட் கம்பெனி படங்கள் துளசியை தேடிச்சென்று கொண்டிருக்கிறதாம். ஆனால், அப்படி நடித்தால் தனது மகளின் ரேஞ்ச் இறங்கி விடும் என்று நினைக்கும் ராதா, யான் வெளியாகி வெற்றி பெற்றால் மறுபடியும் மெகா படங்கள் தேடி வரும் என்று பட்ஜெட் படங்களை திருப்பி விட்டுக்கொண்டிருக்கிறாராம்.

அதோடு தனது மார்க்கெட் மந்தமாகி விட்டதை எண்ணி சோர்ந்து போயிருக்கும் மகள் துளசி நாயரை சினிமாவில் வெற்றி தோல்வியெல்லாம் ரொம்ப சகஜம். எதிர்பார்க்கிற படம் ஓடாது. எதிர்பார்க்காத படம் ஓடும் என்று சொல்லி தேற்றிக்கொண்டிருக்கிறாராம் ராதா.