எதிர்வரும் 16.02.2019 திகதி அன்று வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு அருகாமையில் உள்ள YMCA மண்டபத்தில் காலை 09:30 மணிக்கு நடைபெறவுள்ளது.
அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் அழைக்கின்றோம். வட மாகாணத்தை சேர்ந்த மத்திய மற்றும் மாகாண அரச சேவைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் அனைவரும் எம்முடன் இணைந்து செயற்படலாம்.
புதிதாக எமது சங்கத்தில் இணைந்து கொள்ள விரும்பும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினையும் வரவேற்கின்றோம்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதோடு உங்கள் அனைவரது மனப்பூர்வமான ஒத்துழைப்புக்களைத் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம்
தொடர்புகளுக்கு:
வட மாகாண அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் சங்கம்,
இல: 59, சங்கிலியன் வீதி,
நல்லூர்.
ஈ – மெயில் (E-Mail) | : [email protected] |
தொலைபேசி இல(Telephone No) | : 077-3760039 / 077-9072894 |
எமது வலைத்தளம் | : https://douninp.blogspot.com |
எமது முகப்புத்தகம் | : https://www.facebook.com/douionnp |