பாஜகவுடன் கூட்டணியா : குழப்பத்தில் கருணாநிதி!!

853

karunanithiபாஜகவுடன் கூட்டணி அமைப்பு தொடர்பான திமுகவின் மனநிலையை வெளிப்படையாகச் சொல்ல முடியாது என்று கருணாநிதி கூறினார். சென்னையில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி..

கேள்வி: திமுக காங்கிரஸ் கூட்டணி தொடருமா?

பதில்: பொதுவாகக் கூட்டணி பேச்சுவார்த்தைகளே இன்னும் தொடங்கவில்லை. எனவே யாரோடு கூட்டணி என்பது பற்றிய பேச்சே எழவில்லை.

கே: பாஜகவோடு கூட்டுச் சேரலாம் என்ற மனநிலையில் திமுக இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?

ப: திமுகவின் மனநிலை என்ன என்பதை வெளிப்படையாக உங்களிடம் சொல்லமுடியாது.

கே: அண்ணா ஹசாரே மீண்டும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளாரே அந்தப் போராட்டத்தின் மீது நம்பிக்கை இல்லையா?

ப: நம்பிக்கையும் இருக்கிறது, ஆதங்கமும் இருக்கிறது.

கே: திமுக பொதுக்குழுவின் முக்கியத்துவம் என்ன?

ப: நிலைமைக்கேற்ப.. என்றார் கருணாநிதி.