தென் ஆபிரிக்க மண்ணில் இந்திய அணிக்கு தொடரும் சோகம்!!

563

dhoniதென் ஆபிரிக்கா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரு போட்டிகளில் படுதோல்வி அடைந்து தொடரை இழந்தது.

இதற்கு அணியின் நடுவரிசை வீரர்கள் யுவராஜ் சிங், ரெய்னாவின் நிலையற்ற துடுப்பாட்டமும் ஒரு காரணம். யுவராஜ் சிங் இந்த ஆண்டு பங்கேற்ற 17 ஒருநாள் போட்டிகளில் 274 ஓட்டங்கள் (2 அரை சதம்) தான் எடுத்துள்ளார். சராசரி 19.71 ஓட்டங்கள். தென் ஆபிரிக்க மண்ணில் விளையாடிய 11 போட்டிகளில் 211 ஓட்டங்கள் (23.44) எடுத்தார்.

ரெய்னா இவரைவிட பரவாயில்லை. கடைசியாக விளையாடிய 33 போட்டிகளில் 770 ஓட்டங்கள் (சராசரி 35.00) அடித்துள்ளார். தொடர்ந்து தடுமாறுகிறார்.

இது குறித்து இந்திய அணியின் அணித்தலைவர் டோனி கூறுகையில்.. கடந்த சில தொடர்களாக நடுவரிசை துடுப்பாட்ட வீரர்கள் சொதப்புகின்றனர். இது அணிக்கு நெருக்கடியாக அமைகிறது.

வெளிநாடுகளுக்கு போட்டிகளில் பங்கேற்க செல்லும் போதெல்லாம் ஷார்ட் பிட்ச் பந்தில் திணறுவது குறித்து பேசுகின்றனர். ஏனெனில், துணைக்கண்டத்து ஆடுகளங்களில் இந்த முறையில் அதிகம் பந்துவீசுவதில்லை.

மொத்தத்தில் சில போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கலாம். சில போட்டிகளில் தோல்வியடைந்து இருக்கலாம். இதில் இருந்து என்ன கற்றுக் கொண்டோம் என்பது தான் முக்கியம்.

முதல் போட்டியில் பந்து வீச்சு சரியில்லை. அடுத்த முறை துடுப்பாட்டத்தில் ஏமாற்றம் கிடைத்தது என்றும் அடுத்த போட்டியில் வெற்றிக்கு முயற்சிப்போம் எனவும் கூறினார்.

தென் ஆபிரிக்க மண்ணில் கடந்த 21 ஆண்டுகளாக இந்திய அணி, ஒருநாள் தொடரை வென்றதில்லை. இம்முறை உலக சம்பியன் மற்றும் நம்பர் 1 அந்தஸ்துடன் சென்ற இந்திய அணிக்கு மீண்டும் ஏமாற்றம் கிடைத்தது.

19 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது, 14 போட்டியில் தோல்வி, 1 போட்டிக்கு முடிவு இல்லை.

டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணி ஐந்து முறை தென் ஆபிரிக்கா சென்றது. இதில் நான்கு முறை (1992-93, 96-97, 2001, 06-07) தொடரை இழந்தது.