விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் சகாப்தம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகம்!!

974

shanmuga-pandiyanநடிகர் விஜயகாந்துக்கு பிரபாகரன், சண்முகபாண்டியன் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் இளையவரான சண்முக பாண்டியன் சினிமாவில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது.

இதையடுத்து இவர் நடிக்கும் புதிய படத்தை ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் திகதி தொடங்கவிருக்கிறார்கள். இந்த படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுதீஷ் தயாரிக்கிறார். சந்தோஷ் குமார் ராஜன் என்பவர் இயக்குகிறார். இப்படத்திற்கு சகாப்தம் என பெயர் வைத்திருக்கின்றனர்.

சண்முக பாண்டியன் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து வருகிறார். இந்த படத்தின் தொடக்கவிழா டிசம்பர் 12ம் திகதி காலை 11 மணியளவில் சாலிகிராமத்தில் உள்ள ஆண்டாள் அழகர் இல்லத்தில் நடைபெறவிருக்கிறது.