தந்தையை போல் நானும் கட்சிக்காக உயிரை தியாகம் செய்ய தயார் : சஜித் பிரேமதாச!!

759

Sajithதனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவை போன்று ஐக்கிய தேசியக் கட்சிக்காக உயிரை தியாகம் செய்ய தயாராக இருப்பதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை பெலியத்த பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் பொழுதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

கட்சியில் இருந்து நபர்களை நீக்க வேண்டும் என்பதை பற்றிய சிலர் பேசுகின்றனர். கட்சிக்கு ஆட்களை சேர்க்க வேண்டும் என்பது பற்றி பேசுவதில்லை.

ஒருபுறம் என்னை கட்சியின் தலைமைத்துவச் சபைக்கு வருமாறு கூறுகின்றனர். மறுபுறம் வரவிட்டால் வெட்டி எறிந்து விடுவோம் என்று கூறுகின்றனர்.

நான் இந்த மிரட்டல்களுக்கும் கர்ஜனைகளும் செவிக் கொடுப்பவன் அல்ல. கட்சியின் வெற்றிப் பாதை பற்றியே நான் எப்போதும் சிந்திப்பேன். தோல்வியடைந்து பதவிகளை தக்க வைத்து கொள்ளும் அரசியல் நாடக நடத்துபவர்களுக்கு நான் ஒத்துழைப்பு வழங்க மாட்டேன்.

என் தந்தை கூறியது போன்று உண்மை ஒரு நாள் வெல்லும். என் தந்தை ஐக்கிய தேசியக் கட்சிக்காக உயிரையும் தியாகம் செய்தார். அவர் உயிரை தியாகம் செய்தது போன்று கட்சிக்காக நானும் உயிரை தியாகம் செய்வேன். இதனை மிகவும் மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன் என்றார்.