இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு இம்மாதம் இறுதி முடிவு : முதலமைச்சர் ஜெயலலிதா!!

529

Jeyalalithaஇந்திய – இலங்கை மீனவர்கள் தாக்கப்படும், கைது செய்யப்படும் நடவடிக்கை தொடர்பில் இந்த மாத இறுதியில் முடிவு எட்டப்படும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதன்படி தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை ஒன்றிற்கு இந்த மாத இறுதியில் ஜெயலலிதா ஏற்பாடு செய்துள்ளார்.

இதேவேளை தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையின் அச்சுறுத்தலில் இருந்து காக்க கச்சத் தீவை மீட்பது ஒன்றே வழி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கச்சத்தீவு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. அது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

கடல் எல்லைகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 88 பேர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கை மீனவர்கள் 120 பேர் இந்திய கடற் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்