சரத்குமாரின் திரைப்படத்தை வெளியிட தடை!!

1357

Sarath Kumarசென்னையில் உள்ள, வங்கி கடன் வசூல் தீர்ப்பாயத்தில் ஐ.டி.பி.ஐ. வங்கி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்..

விஸ்வாஸ் பிலிம் நிறுவனத்துக்கு, அப்துல்லா மற்றும், ஆறுமுகம் ஆகிய படங்களை தயாரிக்க 2.30 கோடி ரூபாய் வரை கடன் உதவி வழங்கி உள்ளோம். இந்த இரண்டு படங்களையும் இன்னும் முடிக்கவில்லை. கடன் தொகையையும் திருப்பி செலுத்தவில்லை. படத் தயாரிப்பு நிறுவனம் அளித்திருந்த உத்தரவாதம் போதுமானதாக இல்லை.

கடனை திருப்பி செலுத்தாமல் அச்சம் தவிர் என்கிற புதிய படத்தை தயாரித்துள்ளனர். இம்மாதம் 13ம் திகதி வெளியிட தயார் நிலையில் உள்ளது. இப்படத்தில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார்.

இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த தீர்ப்பாயம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க ஆரம்ப முகாந்திரம் இருப்பதை வங்கி தரப்பு நிரூபித்துள்ளது. எனவே அச்சம் தவிர் படத்தை திரையிட, தடை விதிக்கப்படுகிறது என கூறப்பட் டுள்ளது.

மனுவுக்குப் பதிலளிக்கும்படி தயாரிப்பு நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பவும் உத்தரவிடப்பட்டது. விசாரணை ஜனவரி 20ம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.