டிசம்பர் மாத ராசி பலன் -மேஷம்!!

414

mesha

மனிதர்களின் மனோ நிலையை நொடிப் பொழுதில் புரிந்து கொள்ளும் அசாத்திய ஆற்றல் உள்ளவர்களே துவண்டு வருவோருக்கு தோள் கொடுக்கும் சுமைதாங் கிகளே உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் 6ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

தன்னம்பிக்கை பெருகும். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். உங்களுக்கு கண்டகச் சனி நடைபெறுவதாலும், ராசியிலேயே கேது நிற்பதாலும் தூக்கம் அவ்வப்போது குறையும்.

கடந்த ஒரு மாதகாலமாக 8ம் வீட்டில் மறைந்திருந்த சூரியன் இப்போது 9ம் வீ ட்டில் நுழைந்து உங்களின் பாக்யாதிபதியான குருவின் பார்வையைப் பெற்றிருப்பதால் தந்தையாரின் உடல் நிலை சீராகும். அவருடன் இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கும். அரசுக் காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். உங்களின் தன சப்தமாதிபதியான சுக்கிரன் 10ம் வீட்டில் நிற்பதால் குடும்பத் தில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வரும்.

மனைவிக்குத் தெரியாமல் எந்தக் காரியத்திலும் ஈடுபட வேண்டாம். எதுவாக இருந்தாலும் மனைவியிடம் பகிர்ந்து கொள்வது நல்லது. மனைவி உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார். ஆனால், மனைவி வழிகளுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும்.

அரசியல்வாதிகள் கோஷ்டிப் பூசலாலும் உங்களைப் பற்றிய வதந்திகளாலும் உங்கள் புகழ் குறையும். தலைமையை பகைத்துக் கொள்ளாதீர்கள். மாணவர்களே படிப்பில் மதிப்பெண் கூடும். நண்பர்களுடன் இருந்த கருத்து மோதல்கள் சரியாகும்.

கன்னிப் பெண்களே காதல் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள். யதார்த்தமாகவும் விளையாட்டாகவும் நீங்கள் எதையோ சொல்லப்போய் அதை சிலர் பெரிதாக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. பெற்றோரின் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள்.

வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உங்களின் பாக்யாதிபதியான குருபகவான் 3ம் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் அதிக கடன் வாங்கி பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டாம். கொஞ்சம் எச்சரிக்கையாக செயல்படுங்கள். வேலையாட்கள், பங்குதாரர்களின் போக்கு உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். ரியல் எஸ்டேட், கமிஷன் வகைகளால் பணம் வரும்.

ராசிக்கு 10ல் சுக்கிரன் அமர்ந்திருப்பதால் உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். எவ்வளவுதான் வேலை பார்த்தாலும் அதற்கான பாராட்டுகளோ, அங்கீகாரமோ கிடைக்காமல் போகும். புது அதிகாரி வந்து சேருவார். அவர் மூலமாக சில காரியங்களை சாதிப்பீர்கள். இடமாற்றங்கள் எதிர்பார்த்தபடி அமையும்.

கலைத்துறையினரே பழைய நண்பர்களால் பலனடைவீர்கள். விவசாயிகளே அண்டை நிலத்தாருடன் அனுசரித்துப் போங்கள். வாய்க்கால், வரப்புச் சண்டையை பெரிதாக்கிக் கொள்ள வேண்டாம். விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான திகதிகள்:
டிசம்பர்:- 16, 17, 18, 19, 27, 28
ஜனவரி:- 3, 4, 5, 6, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 29ம் திகதி காலை 9 மணி முதல் 30 மற்றும் 31ந் திகதி மதியம் 1 மணி வரை வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: நீல சரஸ்வதியை தரிசித்து வாருங்கள். முதியோர் இல்லங்களுக்குச் சென்று இயன்ற உதவியை செய்யுங்கள்.