டிசம்பர் மாத ராசி பலன் – மிதுனம்!!

471

mithunam

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று கருதும் நீங்கள், வெறுப்பு விருப்பின்றி அனைவரிடமும் அன்பாகப் பழகி அரவணைத்துச் செல்லக் கூடிய வர்கள். உங்கள் ராசி நாதனான புதன் இந்த மாதம் முழுக்க வலுவாக இருப்பதால் எதிர்ப்புகளை தாண்டி முன்னேறுவீர்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

ஆனால் சூரியன் 7ம் வீட்டில் நிற்பதால் அவ்வப்போது வீண் சந்தேகத்தால் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரக்கூடும். ஈகோ பிரச்னையை தவிர்ப்பது நல்லது. உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் 8ல் மறைந்தாலும் தனஸ்தானத்தை பார்ப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும்.

ஜென்ம குரு தொடர்வதால் மனதிலே ஒரு பற்றற்ற போக்கு உருவாகும். உங்களுடைய சுகஸ்தானமான 4ம் வீட்டில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் சில காரியங்கள் தடைபட்டு முடிவடையும். முதல் முயற்சியிலேயே எந்த வேலையையும் முடிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும்.

உடன்பிறந் தவர்களாக இருந்தாலும் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. வாகனம் அடிக்கடி பழுதாகும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். பழைய வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். வழக்கறிஞரையும் வழக்கில் மாற்ற வேண்டியது வரும்.

குறுக்கு வழியில் எந்த முயற்சியும் வேண்டாம். அரசியல்வாதிகள் தொகுதி மக்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். தொகுதியிலே செல்வாக்கு கூடும். கோஷ்டிப் பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

மாணவர்கள் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். கணிதப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். விளையாட்டுப் போட்டியிலும் வெற்றி பெறுவீர்கள். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நண்பர்களிடமிருந்து விடுபடு வீர்கள். கன்னிப் பெண்கள் உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள்.காதல் விவகாரத்தில் இருந்து வந்த தடுமாற்றம் நீங்கும்.

கல்யாணப் பேச்சுவார்த்தைகள் கொஞ்சம் தாமதமாக முடியும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கூடும். பழைய வாடிக்கையாளர்களை போராடி தக்கவைத்துக் கொள்வீர்கள். பழைய கடன்களையும் இதமாகப் பேசி வசூலிப்பது நல்லது.புது பங்குதாரர்களை அவசரப்பட்டு சேர்க்க வேண்டாம். தரகு வகைகளால் லாபம் வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகிக் கொண்டே போகும். உங்களைப் பற்றிய வீண் வதந்திகளும் வரும். விரும்பத்தகாத இடமாற்றம் வரக்கூடும்.

மேலதிகாரியுடன் மோதிக்கொண்டிருக்காதீர்கள். உயரதிகாரிகளைப் பற்றிய ரகசியங்களை வெளியே சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். கலைத்துறையினர் நகைச்சுவை படைப்புகள் மூலமாக பிரபலமடைவீர்கள். விவசாயிகள் பூச்சித் தொல்லை, எலித் தொல்லை அதிகரிக்கும். அக்கம் பக்க நிலத்தாருடன் வாய்த் தகராறு, வரப்புத் தகராறுகளை தவிர்ப்பது நல்லது. பழைய சிக்கல்கள் தீருவதுடன், புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான திகதிகள் :
டிசம்பர் : 20, 21, 22, 23, 24, 29, 30
ஜனவரி : 7, 8, 9, 10, 12.

சந்திராஷ்டம தினங்கள் : ஜனவரி 2ம் திகதி மாலை 3 மணி முதல் 3 மற்றும் 4ம் திகதி மாலை 6 மணி வரை முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம் : அம்பாள் ஆலயத்திற்கு சென்று வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.