டிசம்பர் மாத ராசி பலன் – கடகம்!!

600

katakam

அல்லல்கள் வந்தாலும் கொள்கைகளை ஒருபோதும் மாற்றிக் கொள்ளாது எடுத்த காரியங்களை முடித்துக் காட்டும் திறமை படைத்த நீங்கள், கடலளவு அன்பு கொண்டவர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் 3ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சவாலான காரியங்களைக்கூட எளிதாக முடிப்பீர்கள். தொட்ட காரியங்கள் துலங்கும்.

வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் கூடும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. கணவன் -மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சூரியன் 6ம் வீட்டில் நிற்பதால் அரசால் அனுகூலம் உண்டு. உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்களுடைய ஆலோசனைகளையும் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்ப்பதால் அழகும் இளமையும் கூடும். மனைவி வழியில் உதவிகள் கிட்டும் என்றாலும் சப்தமாதிபதியான சனிபகவான் ராகுவுடன் சேர்ந்து நிற்பதால் மனைவிக்கு அவ்வப்போது கால் மற்றும் முதுகுவலி வந்து நீங்கும். குரு 12ல் மறைந்திருப்பதால் தவிர்க்க முடியாத செலவினங்கள் அதிகரிக்கும். அத்தியாவசிய செலவுகளும் அதிகமாகிக் கொண்டே போகும். கூடுதல் தளம் கட்டுவது, கூடுதல் அறை கட்டுவது போன்ற கட்டு மானப் பணிகள் நல்ல விதத்தில் முடிவடையும்.

சனியும், ராகுவும் 4ம் வீட்டில் நீடிப்பதால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும். தாய்வழி சொத்துப் பிரச்னைகள் கொஞ்சம் சிக்கலாகி நல்ல விதத்தில் முடிவடையும். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

தொகுதி மக்களிடம் புகழடைவீர்கள். மாணவர்கள் இந்த மாதத்தின் முற்பகுதியில் பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். பொது அறிவுத்திறன் கூடும். கன்னிப் பெண்கள் உங்களின் கோரிக்கைகளை பெற்றோர் நிறைவேற்றி வைப்பார்கள். உயர்கல்வியில் வெற்றியடைவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று சிலர் புது வேலையில் சென்று அமர்வீர்கள்.

வியாபாரத்தில் இந்த மாதம் லாபம் கூடும். புதிதாக முதலீடு செய்வீர்கள். கேட்ட இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். ஏற்றுமதி-இறக்குமதி வகைகளாலும், ஷிப்பிங் வகைகளாலும் லாபம் அதிகரிக்கும். புது வாடிக்கையாளர்களும் வருவார்கள்.

ஒருசிலர் கடையை இடம் பார்த்து மாற்றுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அனுபவமிக்க வேலையாட்கள் வந்தமர்வார்கள். 10ல் கேது தொடர்வதால் உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும்.என்றாலும் மூத்த அதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். சிலருக்கு சாதகமான இடமாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சம்பளம் கூடும், புது சலுகைகளும் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கூடி வரும். பழைய கலைஞர்கள் உதவுவார்கள். விவசாயிகள் மாற்றுப் பயிர்களால் ஆதாயமடைவீர்கள். வங்கிக் கடனுதவி கிடைக்கும். சாதனம் வாங்க உதவிகள் கிடைக்கும். வசதி, வாய்ப்புகள் கூடும் மாதமிது.

ராசியான திகதிகள்:
டிசம்பர் : 16, 17, 23, 24, 25, 26,
ஜனவரி : 1, 2, 9, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள் : ஜனவரி 4ம் திகதி மாலை 6 மணி முதல் 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள்.

பரிகாரம் : முருகனை தரிசித்து வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.