டிசம்பர் மாத ராசி பலன் -கும்பம்!!

413

kumbam

வெகு தொலைவிலிருந்து வீசும் வாடைக் காற்றில் கலந்து வரும் பூக்களின் வாசத்தை உணரும் ஆற்றலைகொண்ட நீங்கள், நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை பிரித்துப் பார்க்கத் தெரிந்தவர்கள். 5ம் வீட்டிலேயே குருபகவான் அமர்ந்திருப்பதால் எத்தனை தடைகள் வந்தாலும் அதையும் தாண்டி முன்னேறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். 8ம் வீட்டிலேயே செவ்வாய் அமர்ந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் மனக்கசப்புகள் வரும்.

வதந்திகளை நம்பாதீர்கள். உங்கள் இருவருக்குள் வீண் சந்தேகத்தை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள். பழைய கசப்பான சம்பவங்களையெல்லாம் அவ்வப்போது நினைவுகூர்ந்து பேசாதீர்கள். அதன்மூலமாக இருவருக்குள்ளும் பிரச்னைகள் வரக்கூடும். சகோதர வகையில் சச்சரவு வரும். உங்கள் மீது யாருக்கும் உண்மையான பாசம் இல்லையென்று ஆதங்கப்படுவீர்கள்.

சொத்துப் பிரச்னை தலைதூக்கும். பூர்வீக சொத்து விஷயத்தில் அதிகம் செலவு செய்து கொண்டிருக்க வேண்டாம். வழக்குகளில் எச்சரிக்கையாக இருங்கள். தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றுவது நல்லது. வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. உங்கள் ராசிநாதனான சனிபகவான் ராகுவுடன் சேர்ந்து நிற்பதால் மனஉளைச்சல்களும், உடல் நலக்குறைவும் வந்து நீங்கும். தூக்கமில்லாமல் போகும்.

உடல் உஷ்ணம் அதிகமாகும். சின்னச் சின்ன காரியங்களைக் கூட இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டியது வரும். உங்களின் பிரபலயோகாதிபதிகளான புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் வீடு கட்டுவதற்கு அனுமதி கிடைக்கும். உங்களின் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும். சூரியன் லாப வீட்டில் நிற்பதால் அரசால் ஆதாயம் உண்டு. புதுவேலை கிடைக்கும்.

அரசியல்வாதிகள் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கட்சித் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். கோஷ்டிப் பூசல் விலகும். மாணவர்களின் மதிப்பெண் கூடும். புதியவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். கன்னிப் பெண்கள் போட்டித் தேர்வுகள், நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. கல்யாணத் தடைகள் நீங்கும். திருமணமும் கூடி வரும்.

வியாபாரம் தழைக்கும். பற்று வரவு உயரும். பழைய கடன்கள் வசூலாகும். புது வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். பழைய பங்குதாரர்கள் மீண்டும் வருவார்கள். புதுப் பங்குதாரரும் அறிமுகமாவார். புதிதாக முதலீடு செய்யலாம். ஏற்றுமதி-இறக்குமதி, ஷிப்பிங் வகைகளால் பணம் வரும். உத்தியோகத்தில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.

எதிர்பார்த்த இடமாற்றம் வந்து சேரும். சிலருக்கு புது உத்யோக வாய்ப்புகளும் கூடி வரும். கலைத்துறையினர்கள் வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். சம்பளநிலுவை கைக்கு வரும். விவசாயிகள் அரசாங்க சலுகைகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். வீட்டில் நல்லது நடக்கும். திடீர் திருப்பங்களும், யோகங்களும் நிறைந்த மாதமிது.

ராசியான திகதிகள்:
டிசம்பர் : 16, 20, 21, 22, 23, 30, 31
ஜனவரி : 1, 8, 9, 10, 11

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 25, 26 ஆகிய திகதிகளில் திட்டமிட்டவை தாமதமாகி முடியும்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை தரிசித்து வாருங்கள். தந்தையிழந்த பிள்ளைக்கு இயன்றளவு உதவுங்கள்.