டிசம்பர் மாத ராசி பலன் மீனம்!!

1082

meenam

எதையும் சிறப்பாக செய்ய விரும்பும் உங்களின் கண்களில் மற்றவர்களின் குற்றம், குறைகள்தான் முதலில் தென்படும். அழுக்கை உண்டு தண்ணீரை சுத்தப்படுத்தும் மீனைப் போல் பிறர் நலம் பேணுவதில் வல்லவர்கள். கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்ந்து கொண்டு சேமிப்புகளையெல்லாம் கரைத்துக் கொண்டு, முன்கோபத்தையும், பிரச்னைகளையும் தந்து கொண்டிருந்த சூரியன் இப்போது 10ம் வீட்டில் நுழைந்திருப்பதால் தந்தையாரின் உடல்நிலை சீராகும்.

எதிர்ப்புகள் நீங்கும். தந்தைவழிச் சொத்துகள் கைக்கு வரும். வழக்குகள் சாதகமாகத் திரும்பும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சுக்கிரன் நிற்பதால் பங்கு மூலம் பணம் வரும். மனைவியும் ஆதரவாக இருப்பார். உங்களுடைய தன பாக்யாதிபதியான செவ்வாய் பகவான் 7ம் வீட்டில் நிற்பதால் பணபலம் கூடும். சகோதர, சகோதரிகள் உறுதுணையாக இருப்பார்கள். ஆனால், உங்கள் ராசியை செவ்வாய் பார்ப்பதால் உடல் உஷ்ணத்தால் கட்டி, சளித் தொந்தரவு, தொண்டை புகைச்சல் வந்து நீங்கும்.

அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டியது வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி பணத்தட்டுப்பாடு வந்து நீங்கும். சில நேரங்களில் தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்குவீர்கள்.

2ம் வீட்டில் கேது நிற்பதால் பேசும்போது கவனமாக இருங்கள். யாரையும் தாக்கிப்பேச வேண்டாம். பார்வைக் கோளாறு வரக்கூடும். சிலர் மூக்குக் கண்ணாடி அணிய வாய்ப்பிருக்கிறது. சோப்பு, ஷம்பூ மாற்றாதீர்கள். அலர்ஜி வரக்கூடும். அரசியல் வாதிகள் புதிய பொறுப்புகள் தேடி வரும். தலைமை உங்களை அழைத்துப் பேசும். தலைமை உங்களுக்கு முக்கியத்துவம் தரும்.

மாணவர்கள் ஆசிரியரின் பாராட்டைப் பெறுவீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி அடைவீர்கள். கன்னிப் பெண்கள் நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். புதுவேலை கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. கடையை விரிவுபடுத்துவீர்கள், அழகுபடுத்துவீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். வாடிக்கையாளர்களிடம் நற்பெயரை சம்பாதிப்பீர்கள். பங்குதாரர்கள் வளைந்து வருவார்கள்.

உணவகம், தேங்காய் மண்டி, ஸ்டேஷனரி வகைகளால் லாபம் வரும். வேலையாட்களால் அவ்வப்போது அலைகழிக்கப்படுவீர்கள். உத்யோகத்தில் பிரச்னை கொடுத்துவந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். செல்வாக்கு கூடும். சிலருக்கு புது வாய்ப்புகளும் வரும். வெளிநாட்டில், அண்டைமாநிலத்தில் வேலை கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

கலைத்து றையினர் உங்களுடைய புதிய படைப்புகள் பாராட்டி பேசப்படும். விவசாயிகள் நவீன யுக்திகளை கையாண்டு லாபமடைவீர்கள். அதிரடி தி ட்டங்கள் நிறைவேறுவதுடன் அந்தஸ்தும் ஒருபடி அதிகரிக்கும் மாதமிது.

ராசியான திகதிகள்:
டிசம்பர் : 16, 18, 19, 23, 24, 25, 26
ஜனவரி : 1, 3, 10, 12.

சந்திராஷ்டம தினங்கள் : டிசம்பர் 27, 28 மற்றும் 29ம் திகதி காலை 9 மணிவரை பேச்சால் பிரச்னைகள் வந்து நீங்கும்.

பரிகாரம் : பெருமாளை தரிசியுங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவுக்கு உதவுங்கள்.