மீனவர்கள் கைது செய்யப்படுவதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது : மு.கருணாநிதி!!

726

M.Kurunanidhiதமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் விவகாரத்தில் மத்திய அரசும், மாநில அரசும் இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க கூடாது என்று திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி நேற்று கோபாலபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது..

நாகைக்கு அருகே இந்திய மீனவர்கள் 100க்கு மேற்பட்டவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறதே.. இதில் மத்திய அரசும், மாநில அரசும் இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண இரு நாடுகளின் மீனவப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசுகிற கூட்டத்தை ஏற்பாடு செய்யப் போவதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறினார்களே. அந்த சந்திப்பு கூட்டம் இன்னும் நடைபெறவில்லை. அந்த கூட்டத்தை முதலில் நடத்தட்டும்.

இலங்கைக் கடற்படை மீனவர்களை கைது செய்வது தொடர்ந்து நீடித்துக் கொண்டே போகிறது. மீனவர்கள் சந்திப்பு பற்றி தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியதாகவும் சொல்லியிருந்தார்களே?

பத்திரிகைகாரர்களுக்கு துணிவு இருந்தால், இதைப் பற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்கலாமே. இவ்வாறு மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.