நெல்சன் மண்டேலாவுக்கு மரியாதை கையெழுத்திட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அஞ்சலி!!!

406

nelsonதென்னாபிரிக்காவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மரியாதைக் கையெழுத்திட்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கொழும்பிலுள்ள தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகராலயத்தில் வைக்கப்பட்டிருந்த இறுதி அஞ்சலி குறிப்புப் புத்தகத்தில் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் தமது அஞ்சலிகளை பதிவுசெய்து வருகின்றனர்.

அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் ஆகியோர் நேற்று புதன்கிழமை மாலை தமது அஞ்சலியினை பதிவு செய்தனர்.