மகளுக்கு விஷம் கொடுத்து தானும் உட்கொண்ட தாய் : மகள் பலி, தாய்க்கு சிறை!!

537

poisonதனது 11 வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாயொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 23ம் திகதி அம்பலன்கொட – ஊராவத்தை பகுதியில் பெண்ணொருவர் தனது மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு, தானும் உட்கொண்டுள்ளார்.

இதுதொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இருவரும் பலபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் தாய் கராபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதோடு மகளான 11 வயது சிறுமி தொடர்ந்தும் பலபிடிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் குறித்த பெண்ணின் மகள் நேற்றையதினம் உயிரிழந்தார்.

இவர்கள் இருவரும் எம்பிலிபிடிய – கொழம்பஆர பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், குடும்பப் பிரச்சினை காரணமாக அம்பலன்கொட பகுதிக்குச் சென்றிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.



சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான 33 வயதையுடைய குறித்த தாய் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவரை சிறையில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் தற்போது அவர் கராபிடிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.