பர்தா அணியும் இஸ்லாமியர்களுக்கு பிரான்ஸ் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரான்ஸில் முன்னதாகவே இச்சட்டம் அமலுக்கு வந்தது. ஆனால் அதை இப்போது யாரும் சரியாக கடைப்பிடிக்கவில்லை.
இது போன்று பர்தா அணிந்து சென்று விபத்துகள் அதிகம் நேர்வதால் இச்சட்டத்தை பிரான்ஸ் அரசு கட்டயப்படுத்தியுள்ளது.
இதனால் சாலையில் பர்தா அணிந்து செல்லும் பெண்கள் பொலிசாரால் வளைக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்படுகின்றனர். மேலும் இதனை அப்பெண்களின் கணவன்மார்கள் அனுமதித்தால் அவர்களும் கடுமையாக பொலிசாரால் தண்டிக்கப்படுகின்றனர்.
இதற்கு இஸ்லாமியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவாகி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.