டெஸ்ட் போட்டியில் நிச்சயம் கலக்குவோம் : டோனி!!

555

Doniஒருநாள் போட்டியில் வெற்றியை பறிகொடுத்தாலும், டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார்.

தென் ஆபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட தொடரை தென் ஆபிரிக்கா 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இதுகுறித்து அணித்தலைவர் டோனி கூறுகையில், ஒருநாள் தொடரை இழந்ததன் மூலம் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டோம்.

வேகப்பந்து, பவுன்சை எப்படி எதிர்கொள்வது என்பதை ஒருநாள் தொடரில் அறிந்தோம். இதனால் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

விக்கெட்டுகளை கைப்பற்ற முடியாமல் திணறிய இஷாந்த்சர்மா கடைசி போட்டியில் சிறப்பாக பந்து வீசினார்கள் என்றும், தென் ஆபிரிக்க அணியில் சிறந்த சகலதுறை உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.