இளைஞன் தற்கொலை
யாழ்ப்பாணதிலிருந்து கொழும்பு நோக்கி வந்த ரயிலில் பாய்ந்து இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காதலில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மனமுடைந்த இளைஞன் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனியார் நிறுவனம் ஒன்றில் பயணி செய்யும் 24 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் நேற்று மாலை ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் தலை தனியாக பிரித்து சென்றுள்ளது.
ரயில் சாரதி வேகத்தை கட்டுப்படுத்த முயற்சித்த போதிலும் ரயிலை நிறுத்திக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. காதலியுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த இரண்டு வருடங்களாகவே அவர் தற்கொலை செய்து கொள்வதாக கூறி வந்துள்ளதுடன், மனரீதியாக அவர் பாதிக்கப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னரும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த இளைஞன் பிரேக் ஒயில் அருந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் போராடி காப்பாற்றப்பட்டார்.








