வெளிநாடொன்றில் பற்றியெரிந்த அடுக்கு மாடி கட்டடம் : உயிர் பிழைக்க மாடியிலிருந்து குதித்த இலங்கைத் தமிழர் பலி!!

538

இலங்கைத் தமிழர் பலி

பங்களாதேஷ் டாக்கா நகரில் தொடர் மாடி கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தின் போது மாடியில் இருந்து குதித்து உயிர் தப்ப முயற்சித்த இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நிரோஷ் விக்னராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இலங்கையர் ஒருவர் உட்பட மேலும் 88 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள 19 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் இன்று இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.