மட்டக்களப்பில் சற்று முன்னர் கோரச் சம்பவம் : மூவர் பலி, 3 பேர் காயம்!!

772

கோர விபத்து

மட்டக்களப்பில் சற்று முன்னர் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தம் காரணமாக மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட தீ விபத்தில் சிக்குண்டவர்களே உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த மூவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.