இலங்கையர் உள்ளிட்ட 19 பேர் பலி

பங்களாதேசின் தலைநகர் டாக்காவில் இடம்பெற்ற அடுக்குமாடி கட்டட தீ விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்காவின் பானானி பகுதியில் அமைந்துள்ள 22 மாடி கட்டடத்தில் நேற்றைய தினம் 8வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து 11வது மாடி வரையில் சென்றுள்ளதுடன் கட்டடத்தின் அருகிலிருந்த இரண்டு கட்டடங்களுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தீ விபத்தின் போது உயிர்தப்பிக்க கட்டடத்தில் இருந்து குதித்தவர்கள் உள்ளிட்ட 19 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், தீயணைப்பு படைகள், இராணுவம், விமானப்படை ஒன்றாக இணைந்து தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களுள் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்குவதாக வெளிவிவாகார அமைச்சு உறுதிப்படுத்தியது.

அத்துடன் இந்த விபத்தில் சிக்குண்ட 73க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் பலரது நிலைமைகள் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





