பணப் பிரச்சினை காரணமாக மனைவியை சுட்டுக் கொன்ற கணவன் கைது!!

686

Jail-1தனது மனைவியை சுட்டுக் கொலை செய்த குற்றஞ்சாட்டின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வென்னப்புவ பிரதேசத்தில் நேற்று அதிகாலை 2 மணியளவில் இந்நபர் தனது மனைவியை சுட்டுக் கொலை செய்துள்ளதாக உயிரிழந்தவரின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

இதன் பின்னதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் 31 வயதான தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

35 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவரிடமிருந்த துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கொலை செய்வதற்காக சந்தேகநபர் துப்பாக்கியை சொந்தமாக வாங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கணவன் – மனைவிக்கிடையில் பணப் பிரச்சினை இருந்துள்ளதாக பொலிஸாரது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.