மாணவியை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்த பாதிரியார் கைது!!

723

abuseதமிழகத்தின்,தாம்பரத்தில் பிளஸ்1 மாணவியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதிரியாரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையை அடுத்த தாம்பரம் அருகேயுள்ள முடிச்சூர் அலமேலுபுரத்தை சேர்ந்தவர் டேவிட் இன்பராஜ். முடிச்சூர் சாலை படேல் தெருவில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் பாதிரியாராக பணியாற்றி வந்தார். இவருக்கு சோனியா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

தாம்பரம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகள் பிளஸ்1 படித்து வந்தார். அந்த மாணவி குறித்த கிறிஸ்தவ ஆலயத்துக்கு செல்வது வழக்கம். இதில் மாணவியுடன் அந்த பாதிரியாருக்கு பழக்கம் ஏற்பட்டது.

மாணவியின் பெற்றோரிடம் நெருக்கம் ஏற்படுத்தி கொண்டு வீட்டில் ஜெபம் செய்ய அடிக்கடி வந்த பாதிரியார் டேவிட் இன்பராஜ் மாணவியின் அழகில் மயங்கினார். மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி வீட்டில் இருந்து டியூசன் சென்ற மாணவியை கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி கடத்திச் சென்றார்.

மகளை பல இடங்களில் தேடிப்பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் மகளை காணவில்லை என தாம்பரம் பொலிசில் புகார் செய்தார். தாம்பரம் பொலிஸார் விசாரணை நடத்தியபோது டேவிட் இன்பராஜ் மாணவியை கடத்திச் சென்றது தெரியவந்தது.

இந்நிலையில் டேவிட் இன்பராஜின் மனைவி சோனியாவும் கணவரை காணவில்லை என தாம்பரம் பொலிசில் புகார் செய்தார். கணவரை கண்டுபிடித்து தரக்கோரி டேவிட் இன்பராஜின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் டேவிட் இன்பராஜை தீவிரமாக தேடிவந்தனர். ஓசூர் அருகே உள்ள விடுதி ஒன்றில் டேவிட் இன்பராஜ் மாணவியுடன் தங்கியிருப்பது தெரியவந்தது. நேற்று டேவிட் இன்பராஜை பொலிஸார் கைது செய்து மாணவியை மீட்டனர். மைனர் பெண்ணை கடத்தி கற்பழித்ததாக பாதிரியார் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மாணவியை கடத்திச் சென்ற டேவிட் இன்பராஜ் முதலில் விசாகப்பட்டினம் சென்று அங்கிருந்து ஒடிசா, மேற்குவங்காளம் சென்று கடைசியாக நாகாலாந்தில் வசித்து வந்தனர். மாணவியின் நகை மற்றும் பணத்தை வைத்து வாழ்க்கை நடத்திய டேவிட் இன்பராஜ், அதன்பின் கிடைக்கும் வேலையை வைத்து குடும்பம் நடத்தியுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.