அடையாளம் தெரியாத அளவிற்கு மெலிந்த பாடசாலை மாணவி ஒருவருக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சீனாவின், ஜியாங்சு மாகாணத்தின் தலைநகரான நானிஜிங்கில் உள்ள ஒரு பாடசாலையில் சமீபத்தில் தேர்வு நடந்தது.
மாணவி ஒருவருக்கு குண்டு முகமுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பாடசாலை நிர்வாகம் அளித்திருந்தது.
அந்த புகைப்படம் 10 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது, இடைப்பட்ட காலத்தில் அந்த மாணவியின் உடல் மெலிந்து முகம் மாறிவிட்டது.
இதனால் அடையாள அட்டையில் இருக்கும் புகைப்படத்துடன் அவரது முகம் மாறுபட்டு இருந்ததால் தேர்வு எழுத அந்த மாணவிக்கு அனுமதிவழங்கப்படவில்லை.
இதுகுறித்து விசாரித்த அதிகாரிகள் இவ்வாறு உடல் மெலிந்தவர்கள் மற்றும் பிளாஸ்டிக் சேஜரி செய்தவர்கள் உடனடியாக, தங்களுடைய புகைப்படத்தை அளித்து புதிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.





