பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் பங்குபற்ற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் டிசம்பர் 18ம் திகதி ஆரம்பமாக உள்ளது. இத்தொடரில் ரங்கன ஹேரத் பங்குபற்ற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
20- 20 சர்வதேச போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டிருந்த நிலையில் ரங்கன ஹேரத் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்குப் பயணம் மேற்கொள்ளவிருந்தார்.
ஆனால் தற்போது அவர் டெஸ்ட் தொடரில் மட்டுமே பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு பதிலாக அஜந்த மென்டிஸ் விளையாடுவார் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.





