பிரபல நடிகை காம்னா ரகசிய திருமணம்!!

751

kamnaபிரபல நடிகையான காம்னா தனது காதலரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயம் ரவி ஜோடியாக தமிழில் இதயத் திருடன் படத்தில் நடித்தவர் காம்னா. பின்னர் ஜீவனுடன் மச்சக்காரன், ராகவா லோரன்சுடன் ராஜாதி ராஜா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் இப்போது அவர் நடிக்காவிட்டாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தார். தெலுங்கில் பட வாய்ப்புகள் குறையவே தன் காதலரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவியுள்ளது.

மாப்பிள்ளை பெயர் சுராஜ், பெங்களூர் தொழில் அதிபர். விரைவில் இந்த திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.