பெற்ற மகளை பணயமாக வைத்து சூதாட்டம் ஆடிய தந்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தை சேர்ந்தவர் சுகுமார் மண்டல். இவர் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞர் ஒருவருடன் சூதாட்டத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்ததால் ஜெயிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனது மகளை வைத்து விளையாடினார்.
இதிலும் தோற்றுப் போகவே வேறு வழியின்றி தன் மகளை திருமணம் செய்து வைப்பதாக கூறி தொடர்ந்து விளையாடி உள்ளார்.
இதிலும் தோல்வியை சந்தித்ததால் வெற்றி பெற்றவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
அடுத்த மாதம் 22ம் திகதி நடக்க உள்ள திருமணத்திற்கு, கடந்த 9ம் திகதி நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
குறித்த சிறுமியின் வயதை விட சூதாட்டத்தில் வெற்றி பெற்ற பக்கத்துக்கு வீட்டுக்காரருக்கு இருமடங்கு கூடுதல் வயது என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றிய செய்தி வெளியானதும் மாநில அதிகாரிகள் அந்த திருமணத்தை நிறுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.





