கனடாவில் இறைச்சி திருடியவருக்கு 94 நாட்கள் சிறை தண்டனை!!

566

Jail-1கனடாவில் இறைச்சி கடையிலிருந்து $71.32 மதிப்புள்ள இறைச்சிகளை திருட முயற்சித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இறைச்சித் துண்டுகளை திருடி தனது ஆடைக்குள் மறைக்க முயற்சித்தமை, அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலினை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் உள்ள Prince Edward Island, என்ற இடத்திலுள்ள ஒரு சிக்கன் இறைச்சிக்கடைக்கு Jeffery Arthur Feehan என்பவர் இறைச்சி வாங்க வந்திருந்தார்.

இவர் இறைச்சிக்கடையில் சிக்கன் வாங்குவது போல நடித்து சில சிக்கன் துண்டுகளையும், மேலும் சில இறைச்சிகளையும் எடுத்து தனது பாக்கெட்டுக்குள் போட்டு மறைத்துள்ளார்.

இதை தற்செயலாக அங்குள்ள பாதுகாப்பு கமாவின் உதவியுடன் கடை ஊழியர் ஒருவர் பார்த்து பின்னர் அவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையின்போது பிடிபட்ட நபர் சம்மந்தம் இல்லாமல் உளறியதால் அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் திருடிய இறைச்சிகளின் மதிப்பு $71.32 என மதிப்பிடப்பட்டது.

பொலிஸார் உடனடியாக வந்து அந்த நபரை கைது செய்து விசாரணை செய்தனர். இவர் இதற்கு முன் வேறு இரண்டு இடங்களில் இதுபோன்று திருடியவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

அவர் மீது ஆறுவித பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு $200 அபராதமும், 94 நாட்கள் சிறைதண்டனையும் அளித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.