வேலூர் தங்க கோவிலில் சிறப்பு பூஜை செய்த நடிகை திரிஷா!!

518

Trishaவேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு நடிகை திரிஷா நேற்று திடீரென வந்தார். அவருடன் தாயார் உமாகிருஷ்ணன் அவரது சித்தி உடன் வந்தனர். திரிஷாவை கண்டு கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் வியந்தனர்.

தங்க கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் வழியில் திரிஷா சென்றார். அங்கு லெட்சுமி நாராயணி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார்.

கோவிலில் 70 கிலோ தங்கத்தினால் சுவர்ணலெட்சுமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் தங்கள் கைகளால் அபிஷேகம் செய்தால் செல்வம் பெருகும் என நம்புகின்றனர்.

இந்த சுவர்ணலெட்சுமிக்கு நடிகை திரிஷா தனது கைகளால் அபிஷேகம் செய்து வழிபட்டார். தொடர்ந்து அவரது தாயார் உமாகிருஷ்ணன் அபிஷேகம் செய்தார். கோவில் சார்பில் திரிஷாவுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.