95 வீதமான மக்களினால் மூன்று வேளையும் சாப்பிட முடிவதில்லை : சரத் பொன்சேகா!!

562

Sarathநாட்டு மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மூன்று வேளை சாப்பிடும் குடும்பங்களின் எண்ணிக்கை நாட்டில் மிகவும் சொற்பளவானதே. 95 வீதமான மக்களினால் மூன்று வேளையும் சாப்பிட முடிவதில்லை.

பெரும் எண்ணிக்கையிலானவர்கள் உண்மையில் இரண்டு வேளை மட்டுமே உணவு உட்கொள்கின்றனர். இதுவே நாட்டின் தற்போதைய அபிவிருத்தி என அவர் குறிப்பிட்டுள்ளார்.