கொலை வழக்கில் பாகிஸ்தான் சிறுவனுக்கு 50 ஆண்டு சிறைத் தண்டனை!!

471

Supreme Court of Pakistanபாகிஸ்தானில் விசாரணை கைதியை கொலை செய்த சிறுவனுக்கு, 50 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானின், லாகூர் அருகே உள்ளது குஜ்ரன்வாலா நகரம். இங்குள்ள நீதிமன்றத்துக்கு கடந்த ஜூன் மாதம் ஹபீஸ் கியாஸ் என்ற விசாரணை கைதி அழைத்து வரப்பட்டார்.

அப்போது நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்த 13 வயது சிறுவன் திடீரென பாய்ந்து சென்று ஹபீசை கத்தியால் குத்திக் கொலை செய்தான்.

தன் தந்தையைத் தாக்கியதற்குப் பழிவாங்குவதற்காகவே ஹபீசை கொலை செய்ததாக சிறுவன் நீதிமன்றத்தில் தெரிவித்தான். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிறுவனுக்கு 50 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.