அமெரிக்காவில் மத்திய மேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் கடும் பனிப்புயல் வீசுகிறது. மணிக்கு 2 அங்குலம் அளவிற்கு பனி கொட்டுகிறது. சுமார் 2540 கிலோ மீட்டர் தூரத்திற்கு பனி குவிந்து கிடக்கிறது.
இதனால் சிகாகோ, வாஷிங்டன், நியூயோர்க், நிவார்க், நியூஜெர்சி, பென்சில்வேனியா, நியூ இங்கிலாந்து ஆகிய பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதன் விளைவாக நேற்று 1000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சாலைகளில் பனிக்கட்டி குவிந்துள்ளதால் வாகன போக்குவரத்தும் முடங்கியது.




