கடும் நெருக்கடியில் விராத் கோலி!!

465

Virat-Kohliதென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் சச்சின் இடத்தில் கோலி களமிறங்க உள்ளதால் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார்.

தென் ஆபிரிக்கா சென்றுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்துள்ளதால் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.

நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் ஓய்வுக்கு பின் இந்தியா மோதும் முதல் டெஸ்ட் என்பதாலும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே சச்சின் இடத்தில் யார் களமிறங்குவார் என்ற விவாதம் எழுந்துள்ளது, இதில் முதல் தெரிவாக இருப்பவர் விராத் கோலி.

எனவே இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் பந்துகள் எகிறும் தென் ஆபிரிக்க ஆடுகளத்தில் திறமையை நிரூபிக்க தயாராக உள்ளார். வலைப்பயிற்சியின் போது உமேஷ் யாதவ், ஷகிர் கான், இஷாந்த் சர்மா உள்ளிட்டோரை பவுன்சர் முறையில் பந்துவீசச் சொல்லி பயிற்சி கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தென் ஆபிரிக்க அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரே ஜென்னிங்ஸ் கூறுகையில் சுழற்பந்துவீச்சை கோலி சிறப்பாக எதிர்கொள்வார்.

ஆனால் தென் ஆபிரிக்க மண்ணில் வேகப்பந்துவீச்சை எதிர்கொள்வது கடினம். இவரது இந்த பலவீனம் ஒருநாள் தொடரில் நன்கு வெளிப்பட்டது.

மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் செல்லும் காரை ஓட்டியவரை, திடீரென மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் பறக்கும் காரை ஓட்டச் சொன்னால் தடுமாற்றம் ஏற்படத் தானே செய்யும். டெஸ்ட் தொடர் கோலிக்கு கண்டிப்பாக சவாலானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.