மெக்சிகோ நாட்டில் 11 பேர் எரித்துக்கொலை : கடத்தல்காரர்கள் அட்டகாசம்!!

654

killedமெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் அட்டூழியத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிர் இழந்து வருகிறார்கள்.

இந்நிலையில் டாசாகா மாகாணத்திலுள்ள சான்டியாகோ ஜூஸ்காஹூவா நகருக்கு அருகே லாரியில் எரிந்த நிலையில் 10 பேர் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அதன் அருகே மற்றொரு நபர் தலையில் குண்டு பாய்ந்த காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர்கள் யார், கொலைக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை.

இது தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் சம்பவிடத்துக்குச் சென்று சடலங்களை மீட்டுள்ளதுடன் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.