அண்ட்ரொயிட் கைப்பேசியில் ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஒகேம்பேட்டையை சேர்ந்தவர் எல்.ராஜசேகரன். இவருடைய மகன் சஞ்சீவி (20). இவர் சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
இவர் ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து சஞ்சீவி நிரூபர்களிடம் கூறுகையில், பெண்களுக்கு ஏற்படும் ஆபத்து, ஏ.டி.எம். சென்டர்களில் ஏற்படும் கொள்ளை போன்ற நேரத்திலும் மேலும் விபத்து நடக்கும் போதும் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கும் இந்த மென்பொருள் மிக நல்ல முறையில் சேவை செய்கிறது என்று கூறியுள்ளார்.
அதற்கு அண்ட்ரொயிட் மொபைலில், பிளே ஸ்டோர் மெனுவில் ரெஸ்கியூமி என்ற மென்பொருளை முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இதுமுற்றிலும் இலவசம் தான். அதன் உள்ளே கேட்கப்படும் அனைத்து பதிவுகளையும் பதிவு செய்துவிட்டால் போதும், அதற்கேற்றபடி இயங்கும் என்று கூறியுள்ளார்.





