ஷிலிங்போட் மற்றும் சாமுவேல்ஸுக்கு ஐசிசி தடை!!

580

ICCமேற்கிந்திய தீவுகளின் சூழற்பந்துவீச்சாளர்களான ஷேன் ஷிலிங்போட் மற்றும் மார்லன் சாமுவேல்ஸ்சிற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை இடைநிறுத்தியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விதிமுறைகளுக்கு முரணாக அவர் பந்துவீசியமை கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சக வீரரான சுழற்பந்துவீச்சாளர் மார்லன் சாமுவேல்ஸ்சிற்கும் வேகமான முறையில் பந்துவீச சர்வதேச கிரிக்கெட் பேரவை தடைவிதித்துள்ளது.

இந்திய அணிக்கெதிராக அண்மையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது இந்த இருவரின் பந்துவீச்சு முறைமை தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து நியூசிலாந்து தொடருக்கு முன்னதாக கடந்த மாதம் 29 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் இருவரும் உடற்கூற்றியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

நியூசிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு போட்டிகளிலும் ஷேன் ஷிலிங்போட் ஆறு விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதுடன், ஹமில்டனில் நாளைமறுதினம் ஆரம்பமாகவுள்ள இறுதிப் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது நடைபெற்றுவரும் நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் மார்லன் சாமுவேல்ஸ் பந்துவீச மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.