ஐசிசி போட்டி நடுவர்கள் இந்திய வீரர்களுக்கு எதிராக நடந்து கொள்கின்றனர் என தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் கவாஸ்கர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும், வர்ணனையாளருமாக கவாஸ்கர் தனது கடும் கண்டனைத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு எதிரான நிலையில் ஐசிசி நடுவர்கள் உள்ளனர்.
இதனால் போட்டிகளின் போது அவர்கள் ஒரு சார்பாக நடக்கிறார்கள். இந்திய வீரர்களுக்கு எதிராக செயல்படும் நிலை அதிகரித்து வருகிறது.
அவுஸ்திரேலியா– இங்கிலாந்து ஆசஷ் தொடரில் வீரர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்போது நடுவர்கள் எதையும் கண்டுகொள்வது கிடையாது.
ஆனால் இந்திய அணி விளையாடும் டெஸ்ட் போட்டிகளின் போது நடுவர்கள் நடந்து கொள்ளும் விதம் மோசமானது. அவர்களது நிலைப் பாட்டில் இரட்டை நிலை காணப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.





