வவுனியா சிறுவர் துஸ்பிரயோக வழக்கில் தேரருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

996

vavunia_high_courtசிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வவுனியா, அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தின் பொறுப்பாளரான தேரரும் மற்றுமொரு சந்தேகநபரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களான தேரரும் சிறுவர் இல்லத்தின் காவலாளியும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து அவர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தேகநபர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைபாடுகள் தொடர்பிலான விசாரணைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் அவர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களுக்கு எதிராக வவுனியா சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் நிலையத்தில் 5 சிறார்களின் பெற்றோர்கள் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.