சம்பியன்ஸ் லீக் போட்டியில் பங்கேற்ற பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு குறைவான சம்பளம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சம்பியன்ஸ் லீக் போட்டிகள் இந்தியாவில் நடந்தது.
இதில் பங்கேற்ற பைசலாபாத் உல்வ்ஸ் அணி வீரர்களுக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை குறைவான சம்பளம் கொடுத்ததாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
போட்டியில் பங்கேற்றதற்காக சம்பியன்ஸ் லீக் ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் பைசலாபாத் அணிக்கு 5 லட்சம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டது.
இது பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் சுமார் 5 கோடியாகும். ஆனால் வீரர்களுக்கு தலா 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வீரர்கள் சிலர் காசோலையை வாங்காமல் திருப்பி அனுப்பி விட்டனர்.
தங்களுக்கு கூடுதலாக சம்பளம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரிகள், தங்களுக்கு 5 லட்சம் டொலர்கள் வழங்கப்பட்டாலும் வரியாக, 1 லட்சம் டொலர் பிடித்தம் செய்யப்பட்டு விட்டது என்று தெரிவித்துள்ளனர்.





