கேஸ் விலை உயர்த்தப்படாது : நுகர்வோர் அதிகார சபை!!

735

Gasகேஸ் விலையை அதிகரிப்பது குறித்து எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ரூமி மஸ்ருக் தெரிவித்துள்ளார்.

ஆனால் கேஸ் விலையை அதிகரிக்க வேண்டும் என நிறுவனங்களிடம் இருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பால் மா நிறுவனங்கள் மீதான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சந்தையில் பால் மா தட்டுப்பாட்டை ஏற்படுத்த சில நிறுவனங்கள் முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.

அதன்மூலம் பால் மா விலையை உயர்த்திக் கொள்ள அந்நிறுவனங்கள் எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதனால் பால் மாவை களஞ்சியசாலையில் மறைத்து வைக்கும் நடவடிக்கையில் சில நிறுவனங்கள் முனைப்புக் காட்டுவதாக ரூமி மஸ்ருக் தெரிவித்தார்.

இதனை தடுக்கும் வகையில் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.