வவுனியா பெரியகோமரசங்குளம் மகாவித்தியாலயத்தில் குளவி தாக்கி ஆசிரியர் உட்பட நால்வர் வைத்தியசாலையில்!!

1021

வவுனியா – பெரியகோமரசங்குளம் மகாவித்தியாலயத்தில் இன்று(07.05) குளவிகொட்டுக்கு இலக்காகி ஆசிரியர் உட்பட நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையின் மைதானத்திற்கு அருகே காணப்பட்ட குளவிக்கூடு காற்றினால் கலைந்து தாக்கியதினால் ஆசிரியரொருவரும் , மூன்று மாணவர்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சிதம்பரபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து பாடசாலை மாணவர்களை அதிபர், ஆசிரியர்களின் உதவியுடன் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டதுடன் 11.00 மணியுடன் பாடசாலை மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.