இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்ககோரி நாகை மீனவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்!!

545

nagaiஇலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நாகை மீனவர்கள் சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

நாகை தாலுகா, அக்கரைப் பேட்டை கிராமத்தில் மீனவர்களின் கூட்டம் நேற்று நடந்தது.

இந்தக் கூட்டத்தில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தி, வரும் 21ம் jpfதி முதல், நாகை தலைமை தபால் அலுவலகம் முன், சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது, மீனவர்கள் விடுதலையாகும் வரை உண்ணாவிரதத்தை கைவிடுவதில்லை என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.