தனது காதலியை இரண்டாவது முறையாக பிரிந்துள்ளார் ஷேன் வோன்.
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வோனுக்கும், இங்கிலாந்தின் பிரபல மொடல் எலிசபெத் ஹர்லேவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இதனால் தனது மனைவியை விவாகரத்து செய்ததுடன் லண்டனில் குடியேற திட்டமிட்டார். இந்நிலையில் இருவருக்கும் பிரச்னை ஏற்படவே கடந்த அக்டோபரில் காதலியை பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியானது.
இதற்கிடையே மீண்டும் இணைந்த ஜோடி தற்போது பிரிந்து விட்டார்களாம். இதுகுறித்து டுவிட்டரில், கடந்த காலத்தில் நடந்ததை மறந்து விட வேண்டும், தொடர்ந்து மனதில் வைத்திருந்தால் அது எதிர்காலத்தை வீணடித்து விடும்.
நேற்று என்ன நடந்தது என்று பார்ப்பதை விட நாளை என்ன நடக்கும் என எதிர்பார்ப்பது தான் வாழ்க்கையில் சிறந்தது என்று தெரிவித்துள்ளார்.





