சூப்பர் ஸ்டாருடன் நேரடியாக மோதும் பவர் ஸ்டார்!!

493

Powerரஜினியின் கோச்சடையான் என்று ரிலீஸ் செய்யப்படுகிறதோ அன்று தான் எனது ஆனந்த தொல்லை படத்தையும் ரிலீஸ் செய்வேன் என்று பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

லத்திகா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பவர்ஸ்டார் சீனிவாசன். லத்திகாவை யாரும் கண்டுகொள்ளாத நேரத்தில் தான் அவருக்கு சந்தானத்துடன் சேர்ந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா மூலம் பவர் பிரபலமானார்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பவர் ஸ்டாருக்கு வாய்ப்புகள் வந்து குவிந்தன. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கூட தனது ஐ படத்தில் பவரை புக் பண்ணினார்.

பவர் ஸ்டார் மீது பலர் மோசடி புகார்கள் கொடுத்தார்கள். இதையடுத்து பவர் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் பிணையில் வெளியே வந்து வழக்கம் போல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திலேயே பவர் தான் ஹீரோவாக நடிக்கும் ஆனந்த தொல்லை பற்றி கூறியிருப்பார். அவர் ஒரே சமயத்தில் ஆனந்தத் தொல்லை, இந்திர சேனா, மூலக்கடை முருகன், தேசிய நெடுஞ்சாலை ஆகிய 4 படங்களுக்கு பூஜை போட்டார். அதில் ஆனந்த தொல்லை மட்டும் தான் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து வெளியிட தயாராக உள்ளது.

ஆனந்த தொல்லை படம் தான் தயாராகிவிட்டதே எப்பொழுது ரிலீஸ் செய்வீர்கள் என்று பவரிடம் கேட்டதற்கு ரஜினியின் கோச்சடையான் என்று ரிலீஸ் செய்யப்படுமோ அன்றே எனது ஆனந்த தொல்லையும் வரும் என்று அவருக்கே உரிய ஸ்டைலில் தெரிவித்தார் பவர்.