இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி சார்ஜா சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. நேற்று நடந்த இந்தப் போட்டியில் 11 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 322 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் ஹபீஸ் 122 ஓட்டங்களையும் சொஹிப் மஸ்சூத் 71 ஓட்டங்களையும் சர்ஜீல் கான் 61 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை சார்பில் சுரங்க லக்மால் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பில் டில்சான் மற்றும் குசல பெரேரா சிறப்பான ஆரம்பத்தை கொடுத்தனர். இருந்தும் இலங்கை அணி 49.4 பந்துகளில் சகல விக்கெட்களையும் இழந்து 311 ஓட்டங்களைப் பெற்று 11 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.
இலங்கை அணி சார்பில் குசல பெரேரா 64 ஓட்டங்களைப் பெற்றார்.
போட்டியின் ஆட்டநாயகனாக மொஹமட் ஹபீஸ் தெரிவு செய்யப்பட்டார்.





