பேஸ்புக்கை பார்த்தபடியே சென்று கடலுக்குள் தவறி விழுந்த பெண்!!

1026

fbஅவுஸ்திரேலியாவில் சுற்றுலாப் பயணி ஒருவர் தனது மொபைலில் ஃபேஸ்புக்கை பார்த்துக் கொண்டே பாலத்தில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்தார்.

அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் கடலில் உள்ள பாலம் ஒன்றின் மேல் பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் கடந்த திங்கட்கிழமை இரவு நடந்து சென்றுள்ளார்.

ஃபேஸ்புக்கில் மூழ்கிய அவர் அப்படியே சென்று பாலத்தின் தடுப்பை தாண்டி கடலில் விழுந்தார். நீச்சல் தெரியாததால் அவர் விழுந்தபடியே கிடந்துள்ளார்.

அவர் கடலில் விழுந்ததை பார்த்த ஒருவர் உதவி கேட்டு அலறியுள்ளார். இதையடுத்து அங்கிருந்த பொலிசார் ஓடி வந்து கடலில் தத்தளித்த அந்த பெண்ணை காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடலில் விழுந்தும் அந்த பெண் கையில் மொபைலோடு தான் மிதந்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா வந்த அந்த பெண் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதை தெரிவிக்க பொலிசார் மறுத்துவிட்டனர்.